Friday, August 16, 2013

அவள்

அவ இன்னும் நல்லா ஞாபகத்துல இருக்கா ..... ANATAMY லெக்சர் முடிஞ்சதுக்கப்புறம் , STATE BANK வாசல் கிட்ட படிக்கட்டுல உக்காந்துக்கிட்டுருப்பா ....... மெதுவா சிரிப்பா ..... ஒல்லியா , ரொம்ப அழகா இருப்பா .......ரெண்டு , மூணு வார்த்தைகள் பேசுவா ...... அதுக்கப்புறம் நானும் , என் கிளாஸ்மேட்டு ஒருத்தனும் சைக்கிள்ல வரும்போது எல்லாம் , என்ன மட்டும் பாத்து சிரிப்பா .. என் பிரண்டு திட்டுவான் ....... சாயங்கால நேரம் ரௌண்டானாவுல நிக்கம்போது பேசுவா .... ..... அவுங்க பேமிலிய பத்தி DISCUSS பண்ணியிருக்கா ........  எவ்ளோ அழகான பொழுதுகள் அவை ....... FIRST YEAR முடிஞ்சது ...........கிளினிகல் கிளாஸ் இருக்கும் போதெல்லாம் , அசிச்டண்டு எல்லாம் அவள பாத்து சிரிச்சு சிரிச்சு சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க ...... அவுங்க மட்டுமா ..சீனியாருங்க கூடதான் .....தேர்ட் இயர் கிளினிகல் எல்லாம் முடிஞ்சது ....... அதுக்கப்புறம் அவள பாக்க முடியல ...... கிட்டத்தட்ட லேசா மறந்துட்டேன் ..... பைனல் இயர் நேரம் ... நாங்கலாம் காலேஜ் போர்டிகோவுக்கு போய் படிப்போம் ..... நானும் , என்னோட பிரண்டு ஒருத்தனும் ஒரு நாள் ஈவினிங் போர்டிகோவுக்கு படிக்க போனோம் ..... அங்க இருக்க பிடிக்காம , எதேச்சையா , மேல பெதாலாஜி சயிட்ல போனேன் ..... அங்க பாத்தா ஒரு அதிர்ச்சி ...... அவளும் , ஒரு திருச்சி காரனும் தனியா பேசிக்கிட்டு இருந்தாங்க ....... எனக்கு சட்டுன்னு மனசெல்லாம் ஒரே வலி ...... யாரோ ஒலக்கைய வச்சி நெஞ்சுல குத்துன மாதிரி இருந்துச்சு .... .... அதுக்கப்புறம் , அடுத்த சில மாதங்கள்ள சீனியர் ஒருத்தரும் அவளும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு ரோட்ல நடந்து போய் கிட்டு இருந்தாங்க ....... எனக்கு பழகி போச்சு ..... இப்ப அதெல்லாம் நினெச்சி பாத்தா சிரிப்புதான் வருது ... காலேஜ் லைப்ல இதெல்லாம் சஹஜம்தானே .... பிரெண்ட்லியா பேசுறது தப்பா என்ன? ....நான்தான் காட்டான் மாதிரி இருதுட்டேனோ ? .... உண்மையிலேயே அவ ரொம்ப நல்லவங்க .......... அவ மேல ரொம்ப பொண்ணுங்களுக்கு பொறாமைன்னு கேள்வி பட்டேன் ........இந்த விசயத்த எனக்கு ஒருத்தன் போட்டு கொடுத்துதான் தெரியும் .. GIRLS  சயிட்ட்ல உள்ள ரகசியம் EXCHANGE  ஆகுறது இந்த மாதிரி  MEDIATERS மூலமாதானே ...ஹி ஹி  ............. அதுக்கப்புறம் அவள , ஒரு பெரிய டூர்ல பாத்தது இப்ப கூட ஞாபகம் இருக்கு .... எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா ..... , ....அவ சாரியும் , அவளும் ..... ...என்னா மேச்சு .........இப்ப கூட மறக்க முடியல ...... அதுக்கப்புறம் காலமெல்லாம் கடந்து போச்சு ...... வாழ்க்கை போராட்டத்துல அவ சுத்தமா மறந்து போய்ட்டா ...... பல வருஷம் கழிச்சு , தஞ்சாவூர் பக்கத்துல , பஸ்சுல போய்க்கிட்டு இருக்கும்போது , ஒரு டவுன்ல , அவ பேருல Dr × ××××××××× ன்னு ஒரு போர்ட பாத்தேன் ...... அதே இன்சியல் .... அதே பேரு ... அவளேதான் ..... திடீர்ன்னு எனக்குள்ள ஒரு வேகம் ..... பஸ் ஸ்டாப்புல எறங்கி , அவள மீட் பண்ணி , பிரெண்ட்லியா , ஒரு ஹலோ , சொல்லிட்டு வரலாம்மான்னு நினெச்சேன் .... என்ன கடிச்சி தின்னவா போரா ...... ஒரு பெரிய தடுமாற்றம் ....சட்டென பதட்டம் ......... .... ஆனா விட்டுட்டேன் .......... நான் அவள பாத்துருக்கணும் இல்லயா ....நீங்களே சொல்லுங்க ..........................